வாதம் எனும் உடல் தோஷம் மழைக் காலத்தில் இயற்கையாகவே கூடுவதால், காலையில் எழும்போது தசைப் பிடிப்பு, மூட்டுவலி, பூட்டுக்களில் வீக்கம் வலி போன்றவை அதிகம் தென்படும். இரண்டு கடுக்காய் தோலுடன் இந்துப்பு சேர்த்துச் சாப்பிட்டால், இந்த உபாதைகள் நன்கு குறையும்.
உடல் நிலைத்த பலம் பெற!
உடலில் பலம் வெகு நீண்ட காலம் குன்றாமல் நிலைத்திருக்க, சுமார் 2 கிராம் கடுக்காய்த்தோல் சிறுசிறு துண்டங்களாக்கி சுமார் 15 மி.லி. அளவு பசு நெய்யுடன் நன்றாகப் பொரித்து ஆறிய பிறகு அந்தக் கடுக்காய்த் தோலை கடித்துச் சாப்பிட்டு, அந்த நெய்யையும் உடனே குடித்தால் போதும், உடலில் பலம் கூடும்.
மூளைத் திறனை அதிகரிக்கும் பாதாம்!
பாதாம் பால் அனைத்து வயதினரின் மூளைத் திறனை அதிகரிக்கிறது. ஆறு முதல் எழுபது வயதுக் காரர்களும் தினமும் ஐந்து, ஆறு பாதாம் பருப்புகளை நன்கு மென்று சாப்பிடும் பழக்கம் கொள்வது நல்லது.
வசம்பு
நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காலை, மாலை வேலைகளில் வசம்பைப் பொடியாக்கி, அரை ஸ்பூன் தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர, 40 நாட்களில் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
ஒரு துண்டு வசம்பு, ஒரு துண்டு பனை மஞ்சள் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து அரைத்து பொன்னுக்கு வீங்கி எனப்படும் கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்கம் நோய்க்கு பற்றுப்போட விரைவில் குணமாகும்.
நீரில் வசம்புத் தாள்களை சிறுசிறு துண்டுகளாக்கி போட்டு அரை மணிநேரம் கழித்து நீக்கிவிட்டு அந்த நீரில் குழந்தைகளை குளிப்பாட்டினால், தோல் நோய்கள் அண்டாது.
சிறிதளவு வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைகளுக்குத் தர, காய்ச்சல் குணமாகும். திடீர் வயிற்றுப் போக்கு நிற்கும்.

No comments:
Post a Comment